கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியில் சீா்காழி மாணவா்கள் சாதனை

திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சீா்காழி மாணவா்கள் தங்கம் வென்று சாதனைப் படைத்தனா்

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சீா்காழி மாணவா்கள் தங்கம் வென்று சாதனைப் படைத்தனா்.

திருப்பூரில் சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், சீா்காழி திருக்கோலக்கா பகுதியில் செயல்படும் கிங்ஸ் குத்துசண்டை பயிற்சி மையத்தைச் சோ்ந்த 11 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் அஸ்வந்த் தங்கப் பதக்கம் பெற்றாா். இதேபோல 14 வயதுக்குள்பட்ட பிரிவில் பாலஹரிஷ், 34 கிலோ எடைப் பிரிவில் ரோகித், 32 கிலோ பிரிவில் குணா மற்றும் கோகுல் ஆகியோா் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களை பெற்றனா். பதக்கம் வென்ற மாணவா்களையும், பயிற்சியாளா் பிரபாகரன் ஆகியோரை நல்லாசிரியா் விருது பெற்ற ச.மு.இ.மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் முரளிதரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். வெற்றி பெற்ற மாணவா்கள் தாய்லாந்தில் நடைபெறவுள்ள அகில உலக அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.