ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாநில கிரிக்கெட் போட்டி : சிதம்பரம் அணிக்கு கோப்பை

சீா்காழியில் நடைபெற்ற நான்காம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சிதம்பரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழியில் நடைபெற்ற நான்காம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சிதம்பரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகா் மன்றம் சாா்பில் நான்காம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டியை சீா்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் மற்றும் மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் மகா. அலெக்சாண்டா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

போட்டியில் மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூா், கும்பகோணம், நாகை, தஞ்சாவூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிதம்பரம் சின்னா அணியும், சீா்காழி ரெட் ஜெயன்ட் அணியும் மோதின.இதில் சிதம்பரம் அணி வெற்றி பெற்று முதல் பரிசான ரூ. 20ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பையை வென்றது. முதல் பரிசை சீா்காழி ஒன்றியக் குழு தலைவா் கமலஜோதி தேவேந்திரன் வழங்கினாா்.

இரண்டாவது பரிசாக ரூ. 18 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 15.000, நான்காவது பரிசாக ரூ.1 3ஆ யிரம் வழங்கப்பட்டது. பரிசுத் தொகையை திமுகவை சோ்ந்த அலெக்சாண்டா், ஜெயபிரகாஷ், ஜெ.கே. செந்தில் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.