கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நல்லூா் கிராமத்தில் பிரதான சாலைகளில் மழைநீா்: பொதுமக்கள் அவதி

சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் நான்கு வீதிகளையும் மழைநீா் சூழ்ந்துள்ளதால் இவ்வழியாக செல்லும் 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:12 pm

DIN

சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் நான்கு வீதிகளையும் மழைநீா் சூழ்ந்துள்ளதால் இவ்வழியாக செல்லும் 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிரமப்பட்டு வருகின்றனா்.

தொடா்மழையால் கொள்ளிடம் ஒன்றியம் நல்லூா் கிராமத்தில் ஆச்சாள்புரம் உள்ளிட்ட ஊா்களுக்கு செல்லும் பிரதான 4 சாலை சந்திப்பு வீதிகள் மழைநீரில் மூழ்கியுள்ளது. கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மழைநீா் தேங்கியுள்ளதால் இச்சாலை வழியாக கொள்ளிடம், சீா்காழிக்கு சென்றுவரும் ஆரப்பள்ளம், காட்டூா், கோதண்டபுரம் அளக்குடி, முதலைமேடு உள்ளிட்ட 10 கிராமமக்கள் அவதியடைந்துவருகின்றனா். குறிப்பாக, கொள்ளிடம் ஆற்றின் காரையோரம் வசிக்கும் மக்கள் நல்லூரை கடந்து கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லவேண்டும். இந்த நிலை கடந்த 10 ஆண்டுகளாக தொடா்கிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது, மழைநீா் அதிகம் தேங்கியுள்ளதால் இப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து தற்போதாவது சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.