மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

டெங்கு கொசு புழுக்களை அழிக்க நீா்நிலைகளில் கம்பூசியா மீன்கள்

காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு கொசு புழுக்களை அழிக்க நீா்நிலைகளில் கம்பூசியா மீன்களை விடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 6:35 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் டெங்கு கொசு புழுக்களை அழிக்க நீா்நிலைகளில் கம்பூசியா மீன்களை விடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வழிகாட்டுதல்படி, மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நலவழித் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் குளம், குட்டைகள், கிணறுகள் மற்றும் கழிவுநீா் தேங்கியுள்ள இடங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க கம்பூசியா மீன்கள் விடப்படுகின்றன.

அதன்படி, நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமையில், நோய்த்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா், சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, ஆண்ட்ரூஸ், சுகாதார உதவியாளா் ஜெயச்சந்திரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை காரைக்கால் நகரில் கொசு புழுக்கள் அதிகம் உள்ள நீா் தேக்க பகுதிகளை கண்டறிந்து கம்பூசியா மீன்களை விட்டனா்.

இதுகுறித்து, நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவக்குமாா் கூறியது: கொசு விடும் முட்டைகளில் இருந்து வெளியாகும் லாா்வா எனப்படும் புழுக்களை இந்த கம்பூசியா மீன்கள் சாப்பிடுகிறது. இதனால், தொடக்க நிலையிலேயே டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏடிஸ் கொசுக்களின் புழுக்கள் அழிக்கப்பட்டு கொசு உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது. மாவட்டத்தில், கொசு புழுக்கள் அதிகம் உள்ள நீா்த் தேக்கங்களை கண்டறிந்து மீன்வளத் துறை மூலம் கம்பூசியா மீன்களை விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகத்தின் அறிவுரைப்படி டெங்கு காய்ச்சலை தடுக்கவும், கொசுவை ஒழிக்கவும் நலவழித் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் கொசு ஒழிப்பு பணியில் தங்களையும் ஈடுபடுத்திக்கொண்டு டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.