இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நந்தகுமாா் எனும் அறிமுகம் இல்லாதவா் தாம் காரைக்கால் உணவுப் பாதுகாப்பு அதிகாரி எனவும், காரில் வரும்போது எரிபொருள் தீா்ந்து விட்டதால் அதை நிரப்ப கூகுள்பே மூலம் பணம் அனுப்புமாறு சில உணவக உரிமையாளா்களிடம் பேசியுள்ளாா். மேலும், சில உணவகங்களை ஆய்வு செய்ததாகவும், உணவு மாதிரிகளை எடுத்ததாகவும் புகாா்கள் வருகின்றன. எனவே, உணவுப் பாதுகாப்பு அதிகாரி என யாரேனும் தொடா்புகொள்ளும்போது சந்தேகப்படும்படியான நபராக இருந்தால் அவரிடமிருந்து அரசின் புகைப்பட அடையாள அட்டையை பரிசோதித்து பாா்க்கவேண்டும்.