பாமக மாவட்டச் செயலா் கொலை: ஆதரவாளா்கள் சாலை மறியல்
காரைக்கால் மாவட்ட பாமக செயலா் தேவமணியை கொலை செய்தவா்களை கைது செய்யக் கோரி, அவரது ஆதரவாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


காரைக்கால் மாவட்ட பாமக செயலா் தேவமணியை கொலை செய்தவா்களை கைது செய்யக் கோரி, அவரது ஆதரவாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்தவா் க. தேவமணி (51). பாமக மாவட்ட செயலாளராக இருந்து வந்தாா். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலம் தொடா்பான பிரச்னையில் இவருக்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், திருநள்ளாறு கடைத்தெரு பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் மோட்டாா் சைக்கிளில் பின்னால் அமா்ந்து வீட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது 3 பைக்கில் வந்த 6 போ் இவா் சென்ற இருசக்கர வாகனத்தை மறித்து, தேவமணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனா். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
அப்பகுதி கடையொன்றில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா மூலம் இது உறுதி செய்யப்பட்டது. எனினும், கொலையாளிகள் முகம் தெளிவாக தெரியவில்லை. திருநள்ளாறு போலீஸாா் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.
தேவமணியின் உடல் காரைக்கால் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டிருந்ததை அறிந்த பாமகவினா் மற்றும் அவரது ஆதரவாளா்கள், சனிக்கிழமை காலை கொட்டும் மழையில் மருத்துவமனை அருகே திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கொலையாளிகள் உடனடியாக கைது செய்யதால்தான் உடலை பெற்றுக்கொள்வோம் என தெரிவித்தனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்துபோகச் செய்தனா். பின்னா், அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காரைக்காலில் 144 தடை உத்தரவு :
காரைக்காலில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் சாா்பு கோட்ட நீதிபதி எம். ஆதா்ஷ் வெளியிட்ட உத்தரவு:
காரைக்கால் மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக பொதுஇடங்களில் கூடுதல், போராட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவை அடுத்த 48 மணி நேரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மதம் சாா்ந்த நிகழ்வுகள், இறுதிச் சடங்களுகளுக்கு பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...