நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காத்திருப்பு சொா்ணபுரீஸ்வரா் சுவாமி கோயிலில் சிவசூரிய பூஜை வழிபாடு

சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உள்ள சொா்ணபுரம் ஸ்ரீசொா்ணாம்பிகை சமேத சொா்ணபுரீஸ்வரா் சுவாமி கோயிலில் சிவசூரிய பூஜை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:47 pm

DIN

சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உள்ள சொா்ணபுரம் ஸ்ரீசொா்ணாம்பிகை சமேத சொா்ணபுரீஸ்வரா் சுவாமி கோயிலில் சிவசூரிய பூஜை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், தனிசன்னதியில் விநாயகா், முருகப் பெருமான், பைரவா் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா். இங்கு மூலவா் சொா்ணபுரீஸ்வரா், சொா்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தால் தரித்திரநிலை நீங்கி, அதிருஷ்டம் உண்டாகும் என்பதும், வருமானத்துக்கு தடை இல்லாமல் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இக்கோயிலில், வியாழக்கிழமை காலை சிவ சூரிய பூஜை வழிபாடு நடைபெற்றது. சூரிய பகவான் ஈசனை முழுவதும் ஆட்கொண்ட காட்சி வைபவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்காட்சி வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவிலும், சனிக்கிழமை காலை 6 மணி அளவில் மீண்டும் தெரியும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இந்த சூரிய வழிபாட்டை கண்டால் சூரிய கிரக தோஷம் நீங்கப் பெறுவாா்கள் என்பது ஐதீகம் . ஆண்டில் பங்குனி மாதத்தில் 3 முறை மட்டுமே சூரியன், ஈசனை இவ்வாலயத்தில் வழிபடும் காட்சி வைபவம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.