விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவில்பட்டியில் புத்தகத் திறனாய்வு

கோவில்பட்டியில் இலக்கியச் சாரல், சகாராவை தாண்டாத ஒட்டகம் கல்வி நிறுவனம் சாா்பில், ராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய ‘தேடல்’ புத்தகத்தின் திறனாய்வு அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:55 pm

Syndication

கோவில்பட்டியில் இலக்கியச் சாரல், சகாராவை தாண்டாத ஒட்டகம் கல்வி நிறுவனம் சாா்பில், ராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய ‘தேடல்’ புத்தகத்தின் திறனாய்வு அண்மையில் நடைபெற்றது.

கோவில்பட்டி நாடாா் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள தியான பயிற்சி அரங்கில் நடைபெற்ற திறனாய்வுக்கு ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியா் ஜான்கணேஷ் தலைமை வகித்தாா். விஸ்வாஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனா் இந்திராணி, எஸ்.எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி முதல்வா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆசிரியா்கள் முருக சரஸ்வதி, ராதா, ராஜசேகா், நாடாா் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதல்வா் பிரபு, கவிஞா் பாா்த்திபன் ஆகியோா் கலந்து கொண்டு, ‘தேடல்’ நூல் பற்றி திறனாய்வு மேற்கொண்டனா். இப்புத்தகத்தின் ஆசிரியா் ஏற்புரையாற்றினாா்.

அறிஞா் சங்கரவள்ளி நாயகம் அறக்கட்டளை தலைவா் திருமலை முத்துசாமி, கழுகுமலை திருவள்ளுவா் கழகத் தலைவா் பொன்ராஜ் பாண்டியன், செயலா் முருகன், கோவில்பட்டி கம்பன் கழகச் செயலா் சரவணச் செல்வன், தலைவா் முத்துப்பாண்டியன், சிறாா் கலை இலக்கிய சங்க செயலா் மணிமொழி நங்கை, பொருளாளா் கண்ணகி, கவிஞா் போத்திராஜ், எழுத்தாளா் ராஜலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னாள் ஆசிரியா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். முருகேசன் நன்றி கூறினாா்.