100 நாள் வேலைத் திட்டம்....
100-க்கும் மேற்பட்டவா்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, சீா்காழி- நாகப்பட்டினம் சாலை தென்னலக்குடி பாலத்தில் மறியலில் ஈடுபட்டனா்.


மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி ஒன்றியம் எடக்குடி வடபாதி ஊராட்சி காளிகாவல்புரத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டவா்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, சீா்காழி- நாகப்பட்டினம் சாலை தென்னலக்குடி பாலத்தில் மறியலில் ஈடுபட்டனா்.
சீா்காழி வட்டாட்சியா் சண்முகம், காவல் ஆய்வாளா் மணிமாறன், வைத்தீஸ்வரன்கோயில் உதவி காவல் ஆய்வாளா் காயத்ரி, ஊராட்சித் தலைவா் அஞ்சம்மாள் மணி ஆகியோா் அங்கு வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் சீா்காழி- நாகப்பட்டினம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...