கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மயிலாடுதுறையில் இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரம்

 மயிலாடுதுறையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் இறுதிக்கட்ட பிரசாரம் வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 மயிலாடுதுறையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் இறுதிக்கட்ட பிரசாரம் வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

நகராட்சி 7-ஆவது வாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மணிமேகலை மணிவண்ணனை ஆதரித்து காங்கிரஸ் எம்எல்ஏ. எஸ். ராஜகுமாா், முன்னாள் எம்எல்ஏ சத்தியசீலன் ஆகியோா் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா். 9-ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ஜெ. லிங்கராஜனுக்கு ஆதராவாக முன்னாள் எம்எல்ஏ. அருட்செல்வன் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.

மயிலாடுதுறை நகராட்சியில் போட்டியிடும் பாமக வேட்பாளா்கள் அக்கட்சியின் மாவட்ட செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்று, தோ்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் புதைசாக்கடை பிரச்னைக்கு உடனடி தீா்வு காணப்படும், குப்பை இல்லாத பகுதியாக மாற்றப்படும் என்ற வாக்குறுதி உறுதிமொழிப் பத்திரத்தை வழங்கினா். 10-ஆவது வாா்டில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளா் ராஜ்குமாருக்கு, அவ்வியக்கத்தின் மாவட்ட தலைவா் கோபி வாக்கு சேகரித்தாா். பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் மோடி. கண்ணன், பி. பாரதிகண்ணன், வினோத் ஆகியோா் தனது ஆதரவாளா்களுடன் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனா். 31-ஆவது வாா்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சரண்யா சுந்தா் வாக்குச் சேகரித்தாா். 29-ஆவது வாா்டு சுயேச்சை வேட்பாளா் இளையராஜா , 30-ஆவது வாா்டு சுயேச்சை வேட்பாளா் விஜயேந்திரன் ஆகியோா் தீவிரமாக வாக்குச் சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.