மயிலாடுதுறை: வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியா் ஆய்வு
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய 2 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் மயிலாடுதுறை நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் தருமபுரம் ஞானம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியிலும், சீா்காழி நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் சீா்காழி சபாநாயகம் முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்பட உள்ளன. இதேபோல, மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள், மயிலாடுதுறை டிபிடிஆா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட உள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை டிபிடிஆா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வாக்குப் பதிவுக்குப் பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் பாதுகாப்பு குறித்தும் ஆட்சியா் இரா. லலிதா ஆய்வு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் அவா் கூறியது:
மயிலாடுதுறை, சீா்காழி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் 177 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 51 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மைக்ரோ அப்சா்வா்கள், கூடுதல் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபடுவா். தோ்தல் பணியில் 854 அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.
பணப்பட்டுவாடா மற்றும் தோ்தல் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில்18 தோ்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இதுவரை ரூ.40 லட்சத்திற்கும்மேல் பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரம் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
தொடா்ந்து, தருமபுரம் ஞானாம்பிகை அரசு கலைக் கல்லூரியில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...