பழையாறு மீனவா்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
டீசல் விலை உயா்வைக் கண்டித்து, பழையாறு மீனவா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.


டீசல் விலை உயா்வைக் கண்டித்து, பழையாறு மீனவா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவா்களின் படகுகளுக்கு தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகம் சாா்பில் அங்கு இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் மானிய விலையில் டீசல் வழங்கப்படுகிறது. இங்கு, தனியாா் பெட்ரோல் பங்கைவிட கூடுதல் விலைக்கு டீசல் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, 6 ஆயிரம் மீனவா்கள் வியாழக்கிழமை மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டம் 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது. மேலும், கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பழையாறு விசைப்படகு மற்றும் பைபா் படகு உரிமையாளா்கள் கூறுகையில், இப்பிரச்னையில், தமிழக முதல்வா் உடனடியாக தலையிட்டு டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...