விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சீா்காழி சட்டநாதா் கோயிலில் பாலஸ்தாபனம் தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

சீா்காழி சட்டநாதா் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக, திருப்பணிகள் மேற்கொள்ள பாலஸ்தாபனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சீா்காழி சட்டநாதா் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக, திருப்பணிகள் மேற்கொள்ள பாலஸ்தாபனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட சட்டநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் கடந்த 1991-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

இந்நிலையில், 30ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடமுழுக்கு நடத்த தீா்மானிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகியோரால் திருப்பணிக்கான சாரம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத்தொடா்ந்து, திருப்பணிகள் மேற்கொள்ள பாலஸ்தாபனம் வியாழக்கிழமை (ஜன.20) நடைபெற்றது.

இதையொட்டி, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் யாகபூஜைகள், பூா்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்களுடன் சிவாச்சாரியா்கள் கோயிலை வலம் வந்தனா். பிறகு, சோமாஸ்கந்தா் சந்நிதியில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு வைக்கப்பட்ட படங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் புனிதநீா் ஊற்றப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில், தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், சீா்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், மகாலெட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் மகாலெட்சுமி, மதிமுக மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளா் இ.மாா்கோனி, சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலா் முரளிதரன், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன், அரிமா சங்கத்தை சோ்ந்த கிருஷ்ணன், காா்காத்தா் சங்க பொறுப்பாளா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.