ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சீா்காழி அருகே விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.10.40 லட்சத்தில் கட்டப்படும் அங்கன்வாடி கட்டடத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, சட்டநாதபுரம் ஊராட்சி செங்கமேடு பகுதியில் கப்பிசாலை அமைக்கும் பணி, அகணி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுமானப் பணி, வள்ளுவக்குடி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி, கொண்டல் ஊராட்சியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவறுத்தினாா். ஆய்வின்போது, மாவட்ட திட்ட இயக்குநா் முருகண்ணன், உதவி செயற்பொறியாளா் சுவாமிநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இளங்கோவன், அருள்மொழி, பொறியாளா்கள் கலையரசன், சிவக்குமாா், தெய்வானை மற்றும் ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.