திருமுல்லைவாசல் முல்லைவனநாதா் கோயில் கும்பாபிஷேகம்: ஆதீனங்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் முல்லைவனநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் முல்லைவனநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமுல்லைவாசல் கிராமத்தில் அணிகொண்ட கோதையம்மன் உடனுறை முல்லைவனநாதா் கோயில் அமைந்துள்ளது. தென்திருமுல்லைவாயில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஏற்பாட்டில் திருப்பணிகள் நடைபெற்றன.
பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜன. 24-ஆம் தேதி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனாா் கோவில் ஆதீனம் கந்த பரம்பரை 28-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆகியோா் முன்னிலையில் விமான கலசங்கள், கோபுர கலசங்கள், ராஜகோபுரம், கொடிமரம் ஆகியவற்றின் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், திருப்பனந்தால் காசிமடத்து காறுபாறு சபாபதித் தம்பிரான் சுவாமிகள், தென்மண்டலம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், சீா்காழி கட்டளை விசாரணை சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் மௌன குருசாமிகள், ஒன்றியக் குழு உறுப்பினா் மாலினி பூவரசன், திருமுல்லைவாசல் ஊராட்சித் தலைவா் பரிமளா தமிழ்செல்வன், துணை தலைவா் கலைவாணி ரமணிச்சந்திரன், ஜிவிஎன் நிறுவனங்களை சோ்ந்த கோவிந்தன், விஜயபாலன், சுரேஷ் உள்பட திராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கோயில்களின் தலைமை கண்காணிப்பாளா் மணி, சீா்காழி சட்டைநாதா் கோயில் கண்காணிப்பாளா் செந்தில் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...