தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தை அமாவாசை: பூம்புகார் சங்கமத் துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத் துறையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். 

News image
பூம்புகார் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் சங்கமத் துறையில் பக்தர்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்ட போது எடுத்த படம்.
Updated On :31 ஜனவரி 2022, 4:18 am

DIN

தை அமாவாசையை முன்னிட்டு காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத் துறையில் திங்கள்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். 

அதிகாலை முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் கடலில் நீராட அனுமதிக்கப்படவில்லை, ஆனால் சங்கமத் துறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் காவிரியில் நீராடி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

Story image

பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர்கள் நாகரத்தினம், ஜெயந்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தை அமாவாசை, ஆடி அமாவாசை நாள்களில் பொதுமக்கள் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடன் தீர்ப்பது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.