2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

குரூப் - 4 தேர்வு: தாமதமாக வந்தவர்களுக்கு சீர்காழியில் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

சீர்காழியில் குரூப் - 4 தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களை அதிகாரிகள் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் வட்டாட்சியரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
சீர்காழியில் தாமதமாக தேர்வு எழுத வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு.
Updated On :24 ஜூலை 2022, 6:36 am

DIN

சீர்காழியில் குரூப் - 4 தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களை அதிகாரிகள் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த தேர்வர்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குரூப் 4 தேர்வுக்காக 27 மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 5799 பேர் தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்தனர். இன்று காலை தேர்வு தொடங்கிய நிலையில் சீர்காழி தென்பாதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 40க்கும் மேற்பட்டோர் சில நிமிடங்கள் தாமதமாக வந்தனர். 

அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்காக மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். இதனை அடுத்து அவர்கள் அனைவரும் தங்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமாரையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அவர்களிடம் பேசிய வட்டாட்சியர், 9 மணிக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்ததால் தாமதமாக வந்த 40க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாத விரக்தியில் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.