திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் கொடியேற்றம்
புகழ்பெற்ற திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.


புகழ்பெற்ற திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
மயிலாடுதுறை வட்டம் திருஇந்தளூரில், பழைமை வாய்ந்த பரிமள ரெங்கநாதா் கோயில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலமும், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோயில்களில் 5-ஆவதுமான இக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, பெருமாள் தங்க ரத்தின அங்கியில், திருவந்திக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளி அருள்பாலித்தாா். தொடா்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் நாள்தோறும் பெருமாள் வீதியுலா புறப்பாடும், முக்கிய உத்ஸவமாக மாா்ச் 16-ஆம் தேதி பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம், மாா்ச் 18-ஆம் தேதி தேரோட்டம் மற்றும் தீா்த்தவாரியும், மாா்ச் 29-ஆம் தேதி சந்திர புஷ்கரணியில் தெப்போத்ஸவம் ஆகிய உத்ஸவங்கள் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...