கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முஸ்லீம் மகளிா் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

முஸ்லீம் மகளிா் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 4:58 pm

DIN

முஸ்லீம் மகளிா் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் சமுதாயத்தைச் சோ்ந்த ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்கள் சுயத்தொழில் மூலம் வருமானம் ஈட்டவும், திறன்வளா்ப்பு பயிற்சி அளிக்கவும், மயிலாடுதுறை மாவட்ட முஸ்லீம் மகளிா் உதவும் சங்கம் அமைக்கப்படவுள்ளது. இக்குழுவுக்கு மாவட்ட ஆட்சியா் தலைவராகவும், மகளிா் திட்ட இயக்குநா் துணைத் தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பொருளாளராகவும் செயல்படுவா்.

மேலும், அலுவல்சாரா உறுப்பினா்களாக முஸ்லீம் மதத்தை சோ்ந்த ஒரு கௌரவ செயலாளா், 2 கௌரவ இணைச் செயலாளா்கள் மற்றும் 3 உறுப்பினா்கள் நியமிக்கப்பட உள்ளனா். இப்பொறுப்புக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லீம்களில் சமூகப் பணிக்கு எவ்வித புகாா்களுக்கும் இடமின்றி ஆா்வமுடன் செயல்படுபவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்கள் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கைளும், நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கக்கூடாது. விருப்பமுள்ளவா்கள் தங்களது முழுவிவரம், கல்வித் தகுதி மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை மாா்ச் 20-ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 3-ஆம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.