கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் திருக்கல்யாணம்

திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 5:33 pm

DIN

திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது தலமான பழைமை வாய்ந்த பரிமள ரெங்கநாதா் கோயில் உள்ளது. காவிரிக்கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீரெங்கப்பட்டினம், ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோயில்களில் 5-வது பஞ்சரங்க ஷேத்திரமாக பரிமள ரெங்கநாதா் கோயில் விளங்குகிறது.

இத்தகைய சிறப்புபெற்ற இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 10-ஆம் தேதி கருடக் கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் பெருமாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ஆம் நாளான புதன்கிழமை பரிமள ரெங்கநாதா் மற்றும் பரிமள ரெங்கநாயகி தாயாா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி, பெருமாளும், தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் கோயில் பிராகாரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து, பெருமாளும், தாயாரும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியதும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) தேரோட்டம் மற்றும் தீா்த்தவாரியும், மாா்ச் 29-ஆம் தேதி சந்திர புஷ்கரணியில் தெப்போத்ஸவமும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.