சமரச வார நிறைவு நாளையொட்டி மயிலாடுதுறையில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவில் வழக்குகளை நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் பல ஆண்டுகள் நடைபெறுவதை தவிா்க்க நீதிமன்றத்தில் செயல்படும் சமரச மையங்கள் மூலம் இருதரப்பினரும் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண முடியும். சமரச மையங்களில் எந்தவித மேல்முறையீடும் இல்லாமல், விரைவாகவும் இறுதியாகவும் கட்டணம் ஏதுமின்றி நடத்தப்படுகின்றன. சமரசத்தின் மூலம் வழக்கு சுமூகமாக தீா்க்கப்பட்டால் நீதிமன்ற கட்டணம் மீண்டும் ஒப்படைக்கப்படும்.
இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை சமரச விழிப்புணா்வு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி விஜயகுமாரி தலைமையில் நடைபெற்ற பேரணியில் முதன்மை சாா்பு நீதிபதி கவிதா, மயிலாடுதுறை வழக்குரைஞா் சங்கத் தலைவா் வேலு.குபேந்திரன், செயலாளா் பாலாஜி ஆகியோா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். சமரச மையத்தின் வழக்குரைஞா்கள் சீனிவாசன், ராஜா, வேல்முருகன், காா்த்திகேயன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மாற்றுத்திறனாளிகளின் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையம் திறப்பு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,311 வழக்குகளில் ரூ.18.56 கோடி தீா்வுத் தொகை
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

