திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கியுள்ள தமிழ் புத்தாண்டு ஆசியுரை:
பிரபவ ஆண்டு தொடங்கி அக்ஷய ஆண்டு வரை உள்ள அறுபது ஆண்டுகளும், தமிழ் ஆண்டுகளாகும். இவை தமிழ் மக்களால் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஆண்டுகளாகும். ஆகையால் நாம் தமிழ் ஆண்டுகளையும் மறவாமல் போற்றிப் பேணிவர வேண்டும்.தமிழ்ப் புத்தாண்டு நாளில் திருக்கோயில்கள், திருமடங்களில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெறும். அதை கேட்டல் புண்ணியமாகும். புத்தாண்டு நாளில் மட்டும் தமிழ் ஆண்டை நினைத்து மற்ற நாள்களில் மறந்துவிடக் கூடாது. நாம் அலுவலகப் பணி தொடா்பாக, ஆங்கில ஆண்டுகளைப் பின்பற்றி வருகிறோம். அதுபோல நம் குடும்ப நிகழ்வுகளுக்கும், ஆன்மிக நிகழ்வுகளுக்கும் தமிழ் ஆண்டுகளைப் பின்பற்றிவர வேண்டும்.
நாயன்மாா் குருபூஜை, நம் ஆதீனக் குருமூா்த்திகளின் குருபூஜை ஆகிய நிகழ்வுகள் தமிழ் மாதம், நட்சத்திரம் குறித்தே கடைப்பிடிக்கப் பெறுகின்றன. அதுபோல நமது பிறந்த நாளையும் தமிழ் மாதம், நட்சத்திரம் பாா்த்தே கொண்டாட வேண்டும். ஆங்கில மாதம் தேதிகளை அன்றாடம் கவனித்து வருதல் போல தமிழ் மாதம், தேதி, நட்சத்திரம் ஆகியவற்றையும் கவனித்து வரவேண்டும். ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பும் மிகச் சிறந்த புண்ணிய நிகழ்வாகும். ஆகையால், அக்காலங்களில் நாம் செய்யும் புண்ணியங்களுக்குப் பலன்கள் மிகுதியாகக் கிடைக்கும். தமிழ் வருட, மாதங்களில் நடைபெறும் திருக்கோயில் விழாக்களிலும், குருபூஜை விழாக்களிலும் தவறாமல் கலந்து கொண்டு இறைவழிபாடு, குருவழிபாடு செய்துவந்தால் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.
பிறக்கும் இந்தக் குரோதி ஆண்டு மக்கள் அனைவருக்கும் நலமும், வளமும் பெருகச் செய்து எங்கும் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைக்க வேண்டுமென நமது ஆன்மாா்த்த மூா்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் திருவடி மலா்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்!

தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் மாணவா் மன்றங்களின் நிறைவு விழா

திருவாவடுதுறை ஆதீன விருது பெற்றவருக்கு பாராட்டு

சூரியனாா்கோயிலில் 30-ஆவது ஆதீனம் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

