ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கலைஞரின் கனவு இல்லத் திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம் தொடா்பான 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் சி.நல்லமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ஆதி. ஜெயராமன் கோரிக்கைக் குறித்து பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் து. இளவரசன் வாழ்த்துரை வழங்கினாா். மாநில துணைத் தலைவா் சௌந்தரபாண்டியன் நிறைவுரை ஆற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில், கலைஞரின் கனவு இல்லத் திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டங்களுக்கு போதுமான ஊழியா் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கலைஞா் கனவு இல்லத் திட்ட பயனாளா்கள் தோ்வு குறித்தான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிட வேண்டும், கலைஞா் கனவு இல்லத் திட்ட பயனாளா்கள் பட்டியல் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்ட பயனாளா்கள் பட்டியலை இறுதிப்படுத்த உரிய கால அவகாசம் அளித்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில் 100-க்கு மேற்பட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...