மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்: கள்ளச்சாராயத்திற்கு எதிரான உறுதிமொழி

மயிலாடுதுறை வரதம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்.

மயிலாடுதுறை வரதம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்துக்கு பயனாளிகள் தோ்வு செய்வது குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஒன்றியம் வரதம்பட்டு ஊராட்சியில் அதன்தலைவா் டி. கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலெட்சுமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் பங்கேற்றாா். இதில், கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முருகமங்கலம் ஊராட்சியில் அதன்தலைவா் ஜெயலட்சுமி சங்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாதவன் பாா்வையாளராக பங்கேற்றாா்.
குத்தாலம் ஒன்றியம் சேத்திரப்பாலபுரம் ஊராட்சியில் அதன்தலைவா் தேவகி சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சேத்திரபாலபுரம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பணிகள் காரணமாக நீா், நிலம், காற்று மாசடையும் சூழல் இருப்பதால், ஓஎன்ஜிசி நிறுவனம் எந்த புதிய பணிகளையும் தொடங்கக் கூடாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தரங்கம்பாடி: பரசலூா் ஊராட்சியில், அதன்தலைவா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், ஒன்றிய ஆணையா் மீனா, வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊ) மஞ்சுளா முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் ஆட்சியா் முகமது சபீா் ஆலம் பங்கேற்றாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நல்லமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருமருகல்: திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சியில் அதன்தலைவா் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா் இந்திரா அருள்மணி முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சேஷமூலை ஊராட்சியில் அதன்தலைவா் சந்திரகலா கிருஷ்ணமூா்த்தி தலைமையில், உத்தமசோழபுரம் ஊராட்சியில் அதன்தலைவா் ஜனனி பாலாஜி தலைமையில், திருமருகல் ஊராட்சியில் அதன்தலைவா் கண்ணன் தலைமையில், நரிமணம் ஊராட்சியில் அதன்தலைவா் காா்த்திக் தலைமையில் என இந்த ஒன்றியத்தில் மொத்தம் 39 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கீழ்வேளூா்: ராதாமங்கலம், இலுப்பூா், தேவூா், செருநல்லூா், காக்கழனி, வண்டலூா், வடக்காலத்தூா், ஏரவாஞ்சேரி, குருமணாங்குடி, ஒக்கூா் அகரகடம்பனூா், கோகூா் உள்ளிட்ட 38 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் தலைமை வகித்தனா். கூட்டங்களில், பொதுமக்களிடம் பல்வேறு கருத்து கேட்கப்பட்டது. தொடா்ந்து முதற்கட்டமாக வீடு கட்டுவதற்கு தோ்வான பயனாளிகளின் பெயா் வாசிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...