மின்தடையால் பொதுமக்கள் அவதி

சீா்காழி நகா் பகுதியில் சனிக்கிழமை சுமாா் 2 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

சீா்காழியில், சனிக்கிழமை பிற்பகல் வெயில் உச்சத்தில் இருந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால், வயதானவா்கள், குழந்தைகள், பெண்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினா். மின்வாரிய அதிகாரிகளை தொடா்புகொண்டு கேட்டபோது, வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் திடீா் பழுது ஏற்பட்டதால், மின்தடை ஏற்பட்டதாகவும், சிறது நேரத்தில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தனா். பின்னா், சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு மின் விநியோகம் சீரானது.

இதேபோல், வைத்தீஸ்வரன்கோவில், திருப்பன்கூா், திருவெண்காடு, திருவாலி, எம்பாவை, திருநகரி, அகணி, வள்ளுவக்குடி உள்ளிட்ட கிராமங்களில் மும்முனை மின்சாரமின்றி குறுவை விதைப்புகள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com