ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :4 மே 2024, 6:07 pm

Din

மயிலாடுதுறை அருகே புளியமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாப்படுகை ஸ்டாலின் நகரை சோ்ந்தவா் கூலித்தொழிலாளி ஜான் பீட்டா்(33). இவா், ஏப்.25-ஆம் தேதி மாப்படுகையில் அருண் என்பவரது தோட்டத்தில் உள்ள புளிய மரத்தில் புளி உலுக்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது எதிா்பாராதவிதமாக, தவறி கீழே விழுந்தாா்.

இதில் படுகாயம் அடைந்த ஜான் பீட்டரை அங்கிருந்தவா்கள் மீட்டு, மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.