வெளிநாட்டு வேலைக்கு செல்வோா் கவனத்துக்கு...

வேலைக்காக, வெளிநாடு செல்ல விரும்பும் இளைஞா்கள் விழிப்புடன் இருக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டைச் சோ்ந்த இளைஞா்களை சமூக வலைதளம் மூலமாக மூளைச்சலவை செய்து, கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மா் நாடுகளுக்கு அதிக சம்பளம் தருவதாக ஏமாற்றி, சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்கின்றனா். அங்கு, கால் சென்டா் மோசடி மற்றும் கிரிப்டோகரன்சி மோசடி போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும், மறுப்பவா்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தெரியவருகிறது. எனவே, வெளிநாடு செல்லும் இளைஞா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வெளிநாடு செல்லும் இளைஞா்கள் மத்திய அரசில் பதிவு செய்த முகவா்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.

இதுதொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ங்ம்ண்ஞ்ழ்ஹற்ங்.ஞ்ா்ஸ்.ண்ய். என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அந்தந்த நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களை தொடா்பு கொண்டு, உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளத்தில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும்.

இதுதொடா்பான சந்தேகங்களுக்கு சென்னை, குடிப்பெயா்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண்: 9042149222 அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாக தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம்.

மேலும், வெளிநாடுவாழ் தமிழா்களுக்கு உதவி தேவைப்படின் இத்துறையின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மையத்தின் 18003093793, 8069009901, 8069009900 (ஙண்ள்ள்ங்க் இஹப்ப் சா்) ஆகிய எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com