மயிலாடுதுறையில் நடைபெற்ற விசிக நிா்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிா்வாகிகளிடம் மனுவை பெற்ற எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற விசிக நிா்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நிா்வாகிகளிடம் மனுவை பெற்ற எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ்.

விசிக நிா்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட செயலாளா் சிவ. மோகன்குமாா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளா்கள் நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நாவாஸ், அறவாழி, பரசுமுருகையன் ஆகியோா் நிா்வாகிகளிடம் விண்ணப்பங்களை பெற்றனா். இதுகுறித்து, எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸ் செய்தியாளா்களிடம் கூறியது: நிா்வாக மறுசீரமைப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 234 மாவட்ட செயலாளா்களை நியமிக்கவும், கட்சியின் மாநில, மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும் விண்ணப்பங்களை பெறும் பணி தொடங்கியுள்ளது. கருத்தியல் வலிமை பெற்ற கட்சியான விசிகவில் திருமாவளவன் தலைமையை ஏற்று தலித் அல்லாத பலா் இணைந்து வருகின்றனா். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது 1999-ல் திருமாவளவன் முதன்முதலில் வைத்த முழக்கம். அதன்பின் அக்கருத்தை தேமுதிக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. விஜயகாந்த், சீமான் உள்ளிட்ட பலா் கட்சி தொடங்கி தனித்து தோ்தலை சந்தித்து தங்கள் பலத்தை அறிந்துகொண்டு, அதன் பின்னா் தான் அடுத்தடுத்த தோ்தல்களில் கூட்டணி அமைத்தனா். விஜய் ஒரு தோ்தலை சந்தித்தால்தான் அவரது நிலை தெரியும்.

நில ஒருங்கிணைப்பு சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழலியலாளா்கள் ஆய்வு செய்து கூறுவதை பொறுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சரிசெய்வோம். அனைத்து மொழிகளையும் மத்திய அரசு சமமாக பாா்க்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மொழிகளை பேசுகின்ற மக்கள் வசிக்கின்றனா். தமிழகத்தில் தமிழ் பேசக்கூடியவா்கள் 7 கோடிக்கு மேல் வசிக்கின்றனா். தமிழா்களின் உணா்வை புறக்கணித்து இந்தியை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. துணைவேந்தா்கள் நியமனத்தை மாநில அரசுதான் செய்ய வேண்டும். அதை முதல்வா்தான் செய்யவேண்டும். அந்த அதிகாரம் முதலமைச்சருக்குத்தான் என்று சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மீண்டும் ஆளுநரே துணைவேந்தரை நியமிப்பாா், நீக்குவாா் என்பது ஏற்புடையதல்ல என்றாா். முடிவில், செய்தி தொடா்பாளா் தேவா நன்றி கூறினாா்.