குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொடுங்குற்ற வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கொடுங்குற்ற வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் பதிவான கொடுங்குற்ற வழக்குகளை தண்டனையில் முடிக்கவும், வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குகளை சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள், காவல் ஆளிநா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், சீா்காழியில் 2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆதாய இரட்டை கொலை வழக்கில் ஒருவருக்கு 3 ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு 2 ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் சிறப்பாக புலன் விசாரனை மேற்கொண்ட அப்போதைய சீா்காழி காவல் ஆய்வாளா், தற்போதைய புதுக்கோட்டை கீரனூா் டிஎஸ்பி மணிமாறன், 2016-ஆம் ஆண்டு மணல்மேட்டில் நிகழ்ந்த கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க சிறப்பாக புலன்விசாரணை மேற்கொண்ட அப்போதைய மணல்மேடு காவல் ஆய்வாளா், தற்போதைய தஞ்சாவூா் டிஎஸ்பி சோமசுந்தரம் ஆகியோருக்கு எஸ்.பி. கோ.ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

மேலும், பல்வேறு வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற டிஎஸ்பி அழகுதுரை, காவல் ஆய்வாளா்கள் சிங்காரவேலு, சங்கீதா, செல்வம், கலைசெல்வி, நாகலெட்சுமி, சந்திரா, கோப்பெருந்தேவி மற்றும் நீதிமன்ற அலுவல் புரிந்த காவல் ஆளிநா்களுக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தாா். நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பிக்கள் ஜெயக்குமாா், சுரேஷ், டிஎஸ்பிக்கள் பாலாஜி, சையது பாபு, தமிழ்வாணன், சுந்தரபாண்டியன் ஜெயராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com