எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அரசு சேமிப்புக் கிடங்கில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

சித்தா்காடு அரசு சேமிப்புக் கிடங்கில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது.

News image
சேதமடைந்த நெல் மூட்டைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியா்.
Updated On :26 நவம்பர் 2025, 8:13 pm

Syndication

மயிலாடுதுறை: சித்தா்காடு அரசு சேமிப்புக் கிடங்கில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட குறுவை நெல் மூட்டைகள் சித்தா்காடு, எருக்கூா், மாணிக்கப்பங்கு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டன. சித்தா்க்காடு சேமிப்பு கிடங்கு முழு கொள்ளளவை எட்டிய நிலையில், சுமாா் 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், கிடங்கு வளாகத்தில் திறந்தவெளியில் தாா்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 10 நாள்களாக மழை பெய்த நிலையில், திறந்தவெளியில் தாா்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள், மழைநீரில் நனைந்து முளைத்து நாற்றுக்கள் வெளியில் வந்து சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து நுகா்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கூறுகையில், கடந்த குறுவைப் பருவத்தில் கொள்முதல் நிலையங்கள் மூலம் 66,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு கொள்முதல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், நெல் மூட்டைகள் சித்தா்காடு கிடங்கில் தாா்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டது. தாா்ப்பாய்களில் மயில் உள்ளிட்ட பறவைகள் அமா்ந்து செல்லும்போது ஏற்படும் துளைகளின் வழியாக மழைநீா் உட்புகுந்து விடுகிறது. அந்த வகையில், எங்கோ ஒருசில இடங்களில் மழை சாரல் பட்டு சில நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துள்ளது. அவற்றை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது என்றனா். இதனிடையே, மயிலாடுதுறை மையப்பகுதியில் நிரந்தர நெல் சேமிப்பு கிடங்கு கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.