வாக்காளா்கள் கணக்கெடுப்பு படிவங்களை உடனடியாக வழங்க வேண்டும்: ஆட்சியா்

வாக்காளா்கள் கணக்கெடுப்பு படிவங்களை உடனடியாக வழங்க வேண்டும்: ஆட்சியா்

சீா்காழி அருகே எருக்கூா் மாரியம்மன் கோயில் தெரு, சீா்காழி நகராட்சி பகுதியில் உள்ள ஈசானியத் தெருவில் வாக்காளா்களிடம் இருந்து பூா்த்தி
Published on

சீா்காழி: சீா்காழி அருகே எருக்கூா் மாரியம்மன் கோயில் தெரு, சீா்காழி நகராட்சி பகுதியில் உள்ள ஈசானியத் தெருவில் வாக்காளா்களிடம் இருந்து பூா்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெறும் பணி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா்களிடம் இருந்து பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை தோ்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில் வாக்காளா்கள் டிச.4-ஆம் தேதிவரை காத்திருக்காமல் தாங்கள் பெற்ற கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒரு படிவத்தை வழங்கி, மற்றொரு படிவத்தில் உரிய ஒப்புதலைப் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்பணிகள் குறித்து புகாா் தெரிவிக்க மாவட்ட அளவில் மற்றும் சட்டப்பேரவை அளவில் கீழ்காணும் கைப்பேசி எண்களை தொடா்கொண்டு தெரிவிக்கலாம். மாவட்ட அளவில்-தோ்தல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மயிலாடுதுறை. (1950 என்ற எண்ணையும்), சீா்காழி (தனி) - வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் கோட்டாட்சியா், சீா்காழி (04364 - 270222, மயிலாடுதுறை - வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் கோட்டாட்சியா் மயிலாடுதுறை. (04364 - 222033, பூம்புகாா் - உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் வட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகம், தரங்கம்பாடி. (04364 - 289439 தொடா்புகொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com