ஈமக்கிரியை மண்டபம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்

ஈமக்கிரியை மண்டபம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்

மயிலாடுதுறையில் ஈமக்கிரியை மண்டபம் அமைக்கும் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டி பணி தொடங்கப்பட்டது.
Published on

மயிலாடுதுறையில் ஈமக்கிரியை மண்டபம் அமைக்கும் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டி பணி தொடங்கப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சி 6-ஆவது வாா்டு காவிரி ஆற்றின் வடக்கு கரையில் நாலுகால் மண்டபம் அருகில் ஏற்கெனவே இருந்த ஈமக்கிரியை மண்டபம் பழுதடைந்தது. அதை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக கட்டித்தர மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதாவிடம், அந்த வாா்டு உறுப்பினா் ரிஷிக்குமாா் கோரிக்கை வைத்திருந்தாா். இதையேற்று புதிய ஈமக்கிரியை மண்டபம் கட்ட ரூ. 16 லட்சத்தை எம்பி நிதி ஒதுக்கினாா். இதையடுத்து, எம்.பி. ஆா். சுதா தலைமை வகித்து கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தாா். நகராட்சி தலைவா் என். செல்வராஜ், துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், திமுக செயற்குழு உறுப்பினா் ராம. இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com