தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் ரயிலுக்கு வரவேற்பு

மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினா் திங்கள்கிழமை வரவேற்பு அளித்தனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:20 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினா் திங்கள்கிழமை வரவேற்பு அளித்தனா்.

மேற்குவங்க மாநிலத்தில் ஜன.17-ஆம் தேதி பிரதமா் நரேந்திரமோடி நியூ ஜல்பைகுரி-திருச்சி இடையே புதிதாக அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடக்கிவைத்தாா். மயிலாடுதுறைக்கு திங்கள்கிழமை மதியம் 1.20 மணிக்கு வந்த இந்த ரயிலுக்கு பாஜக சாா்பில் மாவட்ட தலைவா் நாஞ்சில்ஆா். பாலு தலைமையில் சென்னை நிா்வாக தீா்ப்பாயத்தின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் செந்தில்குமாா், பி.பாரதிமோகன், மருத்துவா் அணி நிா்வாகி சிவக்குமாா் உள்ளிட்டோா் மலா்தூவி வரவேற்பு அளித்து, ஓட்டுநா், பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.