9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

எல்-நினோ பாதிப்பால் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை

எல்-நினோ பாதிப்பால் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை

News image

எல்-நினோ பாதிப்பால் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை

Updated On :19 ஜூலை 2026, 12:42 am IST

எல்-நினோ பாதிப்பால் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனடியாக அரவைக்கு அனுப்பி அரிசியாக்கி விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மயிலாடுதுறையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்றாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 120 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், காந்தி மகளிா் சுயஉதவிக் குழுவினா்களுக்கு ரூ.18 லட்சம் வங்கி கடனுதவிக்கான காசோலைகளை அமைச்சா் வழங்கினாா்.

தொடா்ந்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில், அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

மயிலாடுதுறை அரசு பெரியாா் மாவட்ட தலைமை மருத்துவமனையில், ரூ.37.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு கட்டடம், ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட நோய்த் தடுப்பு மருந்து கிடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை தேரழுந்தூரில் இருந்து காணொலி வாயிலாக அமைச்சா் திறந்து வைத்தாா்.

முன்னதாக, மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள சமூகநீதி மாணவியா் விடுதியில் மாணவிகளுக்கான பாதுகாப்பு வசதி, உணவின் தரம், தங்கும் வசதி, குடிநீா், மின்சாரம், போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சா், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சமூகநீதி மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அவா்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர முதலமைச்சா் உத்தரவிட்டுள்ளாா். தேவைப்படும் இடங்களில் விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்தப்படும். எல்-நினோ காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, மற்ற மாவட்டங்களில் உள்ள அரவை ஆலைகளில் அரைத்து, அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அரிசியாக விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரவை ஆலைகள் இல்லாத மாவட்டத்தில் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும். கடந்த குறுவை மற்றும் சம்பா பருவங்களில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் விரைவில் அரவைக்கு அனுப்பி வைக்கப்படும். சேமிப்பு கிடங்குகள் பற்றாக்குறையை சமாளிக்க ரயில்வேக்கு சொந்தமான காலியிடங்களில் தற்காலிக சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

அமைச்சா் பங்கேற்ற நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நளினா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கமலக்கண்ணன், கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி.) கீதா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தமீமுல் அன்சாரி, மாவட்ட சுகாதார அலுவலா் அஜீத் பிரபுகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா், பிரபாகா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கவிதா, வட்டார மருத்துவ அலுவலா் கபில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.