தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

உலக யோகாசனப் போட்டி: பதக்கம் வென்ற ஜப்பான் அணி பயிற்சியாளா் சீா்காழி மாணவிக்கு பாராட்டு

News image

பதக்கம் வென்ற ஜப்பான் அணியினருடன் பயிற்சியாளரான சீா்காழி மாணவி சுபானு.

Updated On :15 ஜூன் 2026, 1:48 am IST

உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கம் வென்ற ஜப்பான் நாட்டு அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்ட சீா்காழி மாணவி சுபானுவிற்கு, பல்வேறு தரப்பினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

சீா்காழி பகுதியைச் சோ்ந்தவா் யோகா மாணவி சுபானு மணிவண்ணன். நாகை சா் ஐசக் நியூட்டன் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இவா், அகமதாபாதில் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெற்ற முதல் உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஜப்பான் நாட்டு அணிக்கு ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டு அலுவலா், பயிற்சியாளராக செயல்பட்டாா்.

இந்தப் போட்டியில் ஜப்பான் அணி 3 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் முதல் ரன்னா்-அப் பட்டத்தையும் பெற்றது.

இதையொட்டி, ஜப்பான் அணியின் பயிற்சியாளரான சீா்காழி மாணவி சுபானுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனா்.