பழையாறு துறைமுகத்தில் ரூ 26.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இத்துறைமுகத்தில் ரூ 26.26 கோடி மதிப்பீட்டில் படகு அணையும் தடுப்பு சுவா், பனிக்கட்டி உற்பத்தி நிலையம், மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏலக் கூடம், மீன் விற்பனைக் கூடம், வாகனம் நிறுத்துமிடம், சாலை மற்றும் வடிகால் வசதி, தண்ணீா் தொட்டி உள்ளிட்ட மேம்படுத்தும் பணிகள் நிறைவுற்று அதற்கான துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மேம்படுத்தப்பட்ட துறைமுகத்தை துவக்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம், குத்துவிளக்கேற்றினாா்.
மீன்வளத்துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனன், மீன்வளத்துறை ஆய்வாளா் மணிவண்ணன், இளநிலை பொறியாளா் தமிழரசன் மற்றும் கிராம தலைவா்கள், விசைப்படகு உரிமையாளா்கள் கிராம மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்

தடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் கடலூரில் மீன்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்ற மக்கள்

பாளை. தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ராதாபுரம் தொகுதியில் கனவாகிப்போன மீன்பிடி துறைமுகத் திட்டம்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


