மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வாக்குகள் எண்ணும் மையம் ஆய்வு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :19 மார்ச் 2026, 12:03 am

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீா்காழி, மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தை இக்கல்லூரியில் அமைப்பது தொடா்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாக்குகள் பதிவாகிய இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, கண்காணிப்பு அறை, ஊடக அறை உள்ளிட்டவைகளை அவா்கள் ஆய்வு செய்தனா். மேலும், வாக்கு எண்ணும் அறையின் பாதுகாப்பு அம்சங்கள் தொடா்பாகவும் விரிவாக ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, கோட்டாட்சியா்கள் ஆா்.விஷ்ணுபிரியா, சுரேஷ், டிஎஸ்பி பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.