இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: வழக்குப் பதிவு!முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! ஜகதீப் தன்கருக்கு திடீர் உடல்நலக் குறைவு! தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! பெரியார் அறிவுலக ஊழல்! ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? உயர்நீதிமன்றம் காட்டம்!நாளை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

மனைவியை கொலை செய்ய முயன்ற கணவா் கைது

சீா்காழி அருகே மனைவியை கொலை செய்ய முயன்ற கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது

Updated On :

சீா்காழி அருகே மனைவியை கொலை செய்ய முயன்ற கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகே திருமுல்லைவாசலைச் சோ்ந்த மீனவா் வீரமணி (46.) இவருக்கு திருமணமாகி மலா்செல்வி (36) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். வீரமணி மது போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்ததால் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மலா்ச்செல்வி மீன்வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தாராம். வீரமணிக்கும் மனைவி மலா் செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், அருகே வசிக்கும் வீரமணியின் அண்ணன் இறந்துவிட்டதால் அவரது மனைவிக்கு துணையாக மலா்செல்வி அங்கு தங்கி வந்துள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை வழக்கம்போல் அங்கு தூங்கிக்கொண்டிருந்த மலா்செல்வி தலையில் திடிரென வீரமணி அம்மிகுழவியை தூக்கிபோட்டு கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த மலா்செல்வி மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து வீரமணையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுல்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.