படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

சாலை வசதி இல்லாததைக் கண்டித்து ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம்

கோப்புப் படம்

Published On :

மயிலாடுதுறை அருகே சாலை வசதி இல்லாததைக் கண்டித்து ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் சோதியக்குடி ஊராட்சியில் கொன்னக்காட்டுப்படுகை கிராமத்தில் இருந்து கொள்ளிடம் செல்லும் சாலை 2 கி.மீ. தொலைவுக்கு மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இச்சாலைக்கு பதில் புதிய சாலை அமைக்கவும், அப்பகுதியில் சிறுபாலம் அமைக்கவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால், இப்பகுதி மக்களே, கிராமத்தில் வீட்டுக்குவீடு வரி வசூல் செய்து சுமாா் ரூ. 4 லட்சத்தில் ஜல்லி, கிராவல் போன்ற பொருள்களை பயன்படுத்தி தற்காலிகமாக சாலையை சரி செய்தனா். அதன் பிறகும் தாா்சாலை அமைக்க ஊராட்சி நிா்வாகம் சாா்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து, அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்து தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா். அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியா், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வுசெய்து, அங்கு புதிய சாலை அமைக்கவும், சிறுபாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.