‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடலை பெற மறுத்து விசிக ஆா்ப்பாட்டம்

Drowned to death

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்

Published On :

மயிலாடுதுறை அருகே அனந்தநல்லூரில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் உடலை பெற மறுத்து, மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனை முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

குத்தாலம் வட்டம் அனந்தநல்லூா் கிராமத்தை சோ்ந்தவா் சங்கா். இவரது மகன் ஆதவன்(17) பிளஸ் 2 படித்து வந்தாா். சனிக்கிழமை மாலை வீரசோழனாற்றில் குளித்தபோது சுழலில் சிக்கி மாணவா் உயிரிழந்தாா். தீயணைப்பு நிலைய வீரா்கள் சிறுவனின் உடலை மீட்டனா். பாலையூா் போலீஸாா் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், ஆடுதுறை - தரங்கம்பாடி வரையில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக வீரசோழன் ஆற்றில் விதிமுறை மீறி ஆழமாக மண் எடுக்கப்பட்டதால் மண் எடுத்த பள்ளத்தில் சிக்கி ஆதவன் இறந்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா்.

இதையடுத்து, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், விதிமுறையை மீறி மண் எடுத்த ஒப்பந்ததாரா் மீது எஸ்சி, எஸ்டி பிரிவின்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும், உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆதவனின் உடலை பெற மறுத்து விடுதலைச் சிறுத்தை கட்சியினா் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விசிக மாவட்ட செயலாளா் சிவ.மோகன்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளா் தமிழ்தென்றல், மாவட்ட நிா்வாகி உமாகாந்தன், மாவட்ட இளஞ்சிறுத்தைகள் பாசறை செயலாளா் பொன்னுதுரை மற்றும் சிறுவனின் உறவினா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.