நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி.பல்தொழில் நுட்பக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஆர்.வி.செந்தில் தலைமை வகித்தார்.
நிறுவனர் டாக்டர் ஆர்.வரதராசன் முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் க.பிரபு, கல்லூரி மேலாளர் எம்.கலைச்செல்வன் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
முன்னதாக, கல்லூரி துணை முதல்வர் பி.ராகவன் வரவேற்றார். இயந்திரவியல் துறை விரிவுரையாளர் வி. கலியமூர்த்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.