டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் செடில் உத்சவம்

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலின் பிரமோத்சவ விழா தேரோட்டம் மற்றும் செடில் உத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 1:31 am IST

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலின் பிரமோத்சவ விழா தேரோட்டம் மற்றும் செடில் உத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக்கோவில் பிரமோத்சவ விழா கடந்த 3-ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழா கொடியேற்றம் மே 4-ம் தேதி நடைபெற்றது.

தினமும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. புதன்கிழமை இரவு வசந்த உத்சவம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு ஓலை சப்பர பவனி நடைபெற்றது. 

பிரமோத்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்தனர். தேரோடும் வீதிகளில் வலம் வந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தைத் தொடர்ந்து, செடில் உத்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தங்கள் குழந்தைகளை, காத்தவராயன் வேடமணிந்து செடில் சுற்றியவரிடம் அளித்து,  செடில் சுற்றி நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.