சீர்காழி தலைமை அஞ்சலகத்தில் ஏடிஎம் சேவை தொடக்கம்

சீர்காழியில் தலைமை அஞ்சலகத்தில் ஏடிஎம் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

சீர்காழியில் தலைமை அஞ்சலகத்தில் ஏடிஎம் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய அஞ்சல் துறை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான, விரைவான சேவையை வழங்கிடும் வகையில் அனைத்து அஞ்சலகங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கி சேவையின் (கோர் பேங்கிங்) கீழ் இணைக்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை கோட்டத்தில் மொத்தமுள்ள 48 அஞ்சலகங்களில் 46 அஞ்சலகங்கள் "கோர் பேங்கிங்' முறையில் இணைக்கப்பட்டுள்ளதோடு, தமிழகம் முழுவதும் இதுவரை 2,478 அஞ்சலகங்கள் இச்சேவையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது சிறப்பு அம்சமாக ஏடிஎம் சேவை செயல்படுத்தபட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 78 அஞ்சலகங்களில் ஏடிஎம் சேவை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை கோட்ட அஞ்சலகம் சார்பில் சீர்காழி தலைமை அஞ்சலகத்தில் ஏடிஎம் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் எல்.துரைசாமி தலைமை வகித்து ஏடிஎம் சேவையைத் தொடக்கி வைத்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன், அஞ்சலக துணைக் கண்காணிப்பாளர்கள் உமாபதி, லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டைகள் தலைமை அஞ்சலக அதிகாரி ஜெயசந்திரன், ஆய்வாளர் பிரபுசங்கர் தலைமையில் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி அஞ்சலக அதிகாரி நட்ராஜ், கணினி நிர்வாகிகள் கோவிந்தராஜன்,

ராஜசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.