அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பள்ளி மாணவர்கள் 2 பேரை காணவில்லை எனப் புகார்

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் இருவரை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:50 am

DIN

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் இருவரை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை கூறைநாடு பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மது ரபீக் மகன் எம். அப்துல் மஜீது (14). மயிலாடுதுறையில்  உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கூறைநாடு சின்னப் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மது மைதீன் மகன்  எம். முகம்மது இஜாஸ் (15). இவர் மயிலாடுதுறையில்  உள்ள தனியார் பள்ளியில் 10 -ஆம் வகுப்புப் படித்து வருகிறார். முகம்மது ரபீக், முகம்மது மைதீன் ஆகிய இருவரும் வெளிநாடுகளில் வேலைப் பார்த்து வருகின்றனர். தாயின் பராமரிப்பில் இருந்து வந்த அப்துல் மஜீது, முகம்மது இஜாஸ் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை  டியூசனுக்கு செல்வதாக கூறிவிட்டு புத்தகப் பையுடன் சென்றவர்கள், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மயிலாடுதுறை காவல்  நிலையத்தில் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் போலீஸார் மாயமான மாணவர்கள் 2 பேரையும்   தேடிவருகிறனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.