அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

சீர்காழி சட்டைநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:10 am

DIN

சீர்காழி சட்டைநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு பிரதோஷத்தையொட்டி சுவாமி-அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நந்திபகவானுக்கு மஞ்சள்,திரவியபொடி, பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், சந்தனம் முதலான 21வகை வாசனை திரவியப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்மன் உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சீர்காழி,பொன்னாகவல்லிஅம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையார் கோயில், திருக்கோலக்கா ஓசைநாயகிஅம்மன் உடனாகிய  தாளபுரீஸ்வரர்சுவாமி கோயில், வைத்தீஸ்வரன்கோயில் தையல்நாயகிஅம்மன் உடனாகிய
வைத்தியநாதசுவாமி கோயில், திருவெண்காடு பிர்ம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிப்பாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.