மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

வேலையின்றி தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

சீர்காழி வட்டத்தில் வேலையின்றி தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Updated On :5 ஏப்ரல் 2018, 9:50 am IST

சீர்காழி வட்டத்தில் வேலையின்றி தவிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றியத்திலுள்ள 79 ஊராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் விவசாயத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். சம்பா நெற்பயிர் சாகுபடி சில கிராமங்களில் மட்டுமே நடைபெற்றது. இதனால், குறிப்பிட்ட சில கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்தது. அறுவடை முழுவதும் முடிந்துவிட்டது. இயந்திர அறுவடையால், தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு மிகவும் குறைந்து விட்டது.
100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ஊராட்சிகள் தோறும் நாள்தோறும் ஆண், பெண் வேலையாள்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை கடந்த ஆறு மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்து முற்றிலும் வறட்சி நிலை ஏற்பட்டு 60 சதவீத நிலங்கள் பயிரிட முடியாமல் தரிசாகக் கிடக்கின்றன. இதனால், வேலையில்லாமல் தவிக்கும் ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்கள் உணவுக்கு சிரமப்பட்டு வருகின்றனர். 
இதுகுறித்து கொள்ளிடம் வட்டார விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சிவப்பிரகாசம்பிள்ளை கூறியது: சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தற்போது வேலையின்றி வறுமையில் வாடிவருகின்றனர். எனவே, ஏழைத் தொழிலாளர்களின் வறுமையைப் போக்கும் வகையில் அவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் நிவாரண உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.