நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பிரதான சாலையின் ஒரு பகுதி புதன்கிழமை திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை, சின்னக்கடை வீதி பகுதியில் சாலையின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியது. அப்போது, அந்த வழியாக 20 -க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளி வாகனத்தின் சக்கரம் சாலைப் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், மயிலாடுதுறையின் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றான மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில், போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. பின்னர், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாகனமானது, பொதுமக்கள் உதவியுன் மீட்கப்பட்டது.
தகவலறிந்த மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தினர், உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை மண் கொட்டி சீர்படுத்தினர். சாலையில் ஏற்பட்ட பள்ளமானது சிறிய அளவில் இருந்ததால், பள்ளி வாகனத்துக்கும், மாணவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சௌதியின் ஜிசான் நகரத்தின் மீது ஹௌதிகள் தாக்குதல்!

ஷ்யாம் சுந்தர் சதம் விளாசல்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு!

சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!

ரக்ஷன் நாயகனாக நடிக்கும் மேரி கோல்ட்! படப்பிடிப்பு தொடக்கம்!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


