விற்பனைக்கு குவிக்கப்படும் தர்ப்பூசணி பழங்கள்
கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், சீர்காழி பகுதியில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.


கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், சீர்காழி பகுதியில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது காலை மற்றும் மாலை நேரங்களில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக வெயிலின் தாக்கம் அவ்வளவாகத் தெரியவில்லை. இன்னும் சில தினங்களில் பனிப் பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கி, கோடை காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும். இதனால், இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட குளிர்ச்சித் தரும் பானம் மற்றும் காய்-கனிகளின் விற்பனை அதிகரிக்கும். நிகழாண்டு, கோடை காலம் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், சீர்காழி பகுதியில் தற்போதே தர்ப்பூசணிப் பழங்கள் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளன.
இதுகுறித்து தர்ப்பூசணி வியாபாரிகள் கூறும்போது, தற்போது பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தர்ப்பூசணிப் பழங்களின் விற்பனை மந்தமாக உள்ளது. பனி குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது தர்ப்பூசணிப் பழங்களின் விற்பனை அதிகரிக்கும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...