வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு இன்று நடக்கிறது

பூம்புகார் மேலையூரில் உள்ள பத்தினிக் கோட்டம் என்றழைக்கப்படும் கண்ணகி கோயிலில்,  கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு திங்கள்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.

Updated On :23 ஜூலை 2018, 5:46 am IST

பூம்புகார் மேலையூரில் உள்ள பத்தினிக் கோட்டம் என்றழைக்கப்படும் கண்ணகி கோயிலில்,  கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு திங்கள்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.
கற்புக்கரசி, பெண்மையின் தெய்வம் என போற்றப்படும் கண்ணகி, நாகை மாவட்டம் பூம்புகாரில் வாழ்ந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. கண்ணகி ஆடி மாதம் அனுஷ நட்சத்திரத்தன்று பூப்பல்லக்கில் ஏறி, வைகுண்டம் சென்று, வீடுபேறு அடைந்ததாக ஐதீகம். 
இதையொட்டி, ஆண்டுதோறும் ஆடி மாத அனுஷ நட்சத்திர தினத்தன்று, பூம்புகார் மேலையூரில் உள்ள கண்ணகி கோயிலான பத்தினிக் கோட்டத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி நிகழாண்டு,  கண்ணகி வீடுபேறு அடைந்த நாள் வழிபாடு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 
இதையொட்டி,  கண்ணகி சிலைக்கு  அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன.  இதற்கான ஏற்பாடுகளை பத்தினிக் கோட்ட காப்பாளரும், சீனிவாசா மேல்நிலைப் பள்ளி செயலாளருமான ராஜசேகரன்,  உதவி தலைமையாசிரியர் ரவி ஆகியோர் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.