வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

தாட்கோ திட்டத்தில் தொழில் தொடங்க ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் தாட்கோ திட்டத்தில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார். 

Published On :

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் தாட்கோ திட்டத்தில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும்  பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. 18 முதல் 65 வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ . 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம், துரித மின் இணைப்புத் திட்டம் , தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (பெட்ரோல், டீசல், எரிவாயு  சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல்).
தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம் , மருத்துவ மையம், மருந்தியல்,  கண் கண்ணாடியகம், முட நீக்கு மையம்,  ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதாரக் கடனுதவி,  மானியம்  திட்டத் தொகையில் 50 சதவீதம் மாவட்ட  ஆட்சியர்  விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வு  எழுதுவோருக்கு நிதியுதவி,  சட்டப் பட்டதாரிகளுக்கு நிதியுதவி. பட்டயக் கணக்கர் நிறுவனச் செயலர்களுக்கு நிதியுதவி , தொழில் தையல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதியுதவி ஆகிய திட்டங்கள் மூலம்  பயன்பெற விரும்பும் இந்து  ஆதிதிராவிடர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பம் படியிறக்கம் செய்தோ அல்லது  நகலை ஜெராக்ஸ் எடுத்து சமர்ப்பிக்கக் கூடாது. விண்ணப்பதாரர் தனது முழு விவரங்கள், புகைப்படம், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்று, பட்டா, சிட்டா ( நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத் திட்டம்) குடும்ப அட்டை  , ஆதார் எண், விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி , திட்டங்களின் விவரங்கள் முதலியவற்றின் ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும்  திட்டங்களுக்கு ஏற்றார்போல் கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட 24  மணி நேரமும் விண்ணப்பங்களை இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம். இதேபோல், மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ மேலாளர்அலுவலகத்தில் ரூ. 60 செலுத்தியும் விண்ணப்பங்களை பதிவு  செய்யலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.